இந்த பதிவு தமிழில் விடுமுறை விண்ணப்பம் எழுதுவதற்கான அடிப்படை அமைப்பை கற்று தரும். இந்த கடிதத்தை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விடுமுறை விண்ணப்பம்
அனுப்புநர்
மு.ரா. இராஜேஷ் கண்ணன்
VII “சி”
அரசு உயர் நிலைப்பள்ளி
மதுரை
பெறுநர்
வகுப்பு ஆசிரியர்
VII “சி”
அரசு உயர் நிலைப்பள்ளி
மதுரை
மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா,
எனக்கு காய்ச்சலால் உடல் நலம் குன்றியுள்ளதால், என்னால் இன்று பள்ளிக்கு வரமுடியவில்லை. ஆகவே, இன்று ஒரு நாள் மட்டும் (10/10/2018) விடுப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி !
இப்படிக்கு உங்கள்
கீழ்ப்படிந்துள்ள மாணவன்,
(மு. ரா. இராஜேஷ் கண்ணன்)
நாள் : 10/10/2018
இடம் : மதுரை
பெற்றோர் கையொப்பம்,
One Response
பொங்கல் திருநாளுக்கு ஊருக்கு செல்ல இருப்பதனால் ஒரு வாரம் விடுமுறை தேவை